×

குழந்தை உட்பட 2 பேரை கடித்து குதறிய வெறிநாய்

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பார்த்திபன் மகன் அர்ஷன்(3) நேற்று காலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வெறிநாய் அர்ஷனை திடீரென கடித்து குதறியது. இதில் குழந்தையின் முகம் மற்றும் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையை கடித்த நாய் ஒரு மணி நேரத்தில் அதே பகுதியில் நூலகத்தில் பணிபுரியும் குழந்தையின் உறவினரான சுப்பிரமணி(48)யையும் கடித்து குதறியது. இதில் அவருக்கு கை, கால் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வெறிநாய் அதேபகுதியில் உள்ள ஒரு பசு மாட்டையும் கடித்துள்ளது. அப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளால் இதனை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குழந்தை உட்பட 2 பேரை கடித்து குதறிய வெறிநாய் appeared first on Dinakaran.

Tags : MERCENARY PARTHIBAN ,ARSHAN ,ERKHAMPATU VILLAGE ,VELUR ,RALLY ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!