×

11 வகை பயிர்களுக்கு காப்பீடு: நெற்பயிருக்கு நவம்பர் 15 கடைசி நாள்

* மக்காச்சோளத்திற்கு 30ம் தேதி கடைசி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் இருபாலருக்கும் கலெக்டர் அழைப்பு

கரூர்: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க அக்டோபர் 6ம் தேதி வரை பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டத்தின் மூலம் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் அக்டோபர் 7ம்தேதி, காலை 7மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடியும் வரை நடத்தப்படவுள்ளது.
17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8 கிமீ (ஆண்கள்), 5 கிமீ (பெண்கள்). 25வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிமீ (ஆண்கள்), 5 கிமீ (பெண்கள்) என்ற அடிப்படையில் ஓட்டப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கும், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெறுபவர்களுக்கு ரூ. 1000ம் வீதம் என 28 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அக்டோபர் 6ம்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் வயது சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல்கள் போட்டி நடைபெறும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

The post 11 வகை பயிர்களுக்கு காப்பீடு: நெற்பயிருக்கு நவம்பர் 15 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Arijar Anna ,Karur ,Arijar Anna… ,Dinakaran ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்