×

குவாண்டம் புள்ளிகளின் ஆய்விற்காக 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: மிகவும் பிரகாசமான வண்ண ஒளிகளை வெளியிடக் கூடிய குவாண்டம் புள்ளிகள் குறித்த ஆய்விற்காக அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவத்திற்கான நோபல் பரிசும், நேற்று முன்தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேதியியல் துறையில் உலகிற்கு நன்மை தரும் கண்டுபிடிப்பதற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசு, எம்ஐடியை சேர்ந்த மவுங்கி பாவெண்டி, கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த லூயிஸ் புரூஸ் மற்றும் நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் அலெக்சி எகிமோவ் ஆகிய 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் தொலைக்காட்சி திரைகள் மற்றும் எல்இடி விளக்குகளில் ஒளியைப் பரப்ப பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய குவாண்டம் புள்ளிகளின் திறனை கண்டறிந்துள்ளனர். இவற்றின் தெளிவான ஒளி, கட்டிகளை துல்லியமாக அடையாளம் காண அறுவைசிகிச்சை நிபுணர்களுக்க உதவுகின்றன. முன்னதாக, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் இந்த விருதை அறிவிக்கும் முன்பாகவே ஸ்வீடனின் சில மீடியாக்களில் வெற்றியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

The post குவாண்டம் புள்ளிகளின் ஆய்விற்காக 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Stockholm ,America ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது...