×

பாமக வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமகவினர் நடத்தும் இரு சக்கர வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவினருக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் செயல்திட்டத்தின்படி இன்று அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இரு சக்கர ஊர்திப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பேரணி நடத்த பாமகவினர் தயாராக உள்ள நிலையில், பல இடங்களில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

பாமகவினரை ஒருங்கிணைக்கும் நோக்குடனும், கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடனும் தான் இரு சக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்படுகின்றன. அமைதியாகவும், ஒழுங்கமைவுடனும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பேரணியை நடத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பிறருக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேரணிகள் நடத்தும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு உண்டு. அதை மதித்து பாமகவினர் நடத்தும் இரு சக்கர பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஒருவேளை இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாளில் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பாமக வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Phamaka ,Ramadas ,Bamaga ,Bamagvinar ,Ramadas' ,Dinakaraan ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக...