×

மயிலாடுதுறையில் வாணவெடி வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கிடங்கு உரிமையாளர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தில்லையாடியில் வாணவெடி வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கிடங்கு உரிமையாளர் கைது செய்யபட்டார். ராம்தாஸ் ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் மோகனை பொறையார் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் அரசு உரிமம் பெற்ற பட்டாசு குடோன் உள்ளது. இந்த பட்டாசு குடோனில் இன்று மாலையில் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் பட்டாசு குடோனில் இன்று திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு குடோனுக்கு ஓடிவந்தனர். அப்போது குடோன் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சிதறி விழுந்துள்ளன. மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள்.

அவர்கள் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொறையார் போலீசார் ராம்தாஸ் ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயிலாடுதுறையில் வாணவெடி வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கிடங்கு உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai Thillaiyadi ,Ramdas ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...