×

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டி: இந்திய அணி 5 தங்கப்பதக்கங்களை வென்றது

ஈரோடு: இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 5 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செப்டம்பர் 30-ம் தேதி முதல் 2 நாட்கள் இலங்கையில் சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளை சேர்ந்த 500 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில்

ஈரோட்டில் இருந்து கலந்து கொண்ட கீர்த்தி வாசன், உதயன், பிரகதீஸ்வரன், சென்விகா ஆகியோர் 5 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றியுடன் ஈரோடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல சண்டிகரில் நடைபெற்ற தேசிய பிரன்ஸ் பாக்ஸிங் போட்டியில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கவின் நந்தன் தங்க பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட 7 பேர் அடங்கிய குழு 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று தமிழ்நாடு திரும்பியது.

The post இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டி: இந்திய அணி 5 தங்கப்பதக்கங்களை வென்றது appeared first on Dinakaran.

Tags : International Karate Tournament ,Sri Lanka ,Erode ,International Karate Competition ,Dinakaran ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...