×

நாமக்கல் அருகே தந்தைக்கு, மகன் வேன் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது விபரீதம்: ஆம்னி வேனுடன் கிணற்றில் மூழ்கி தந்தை பலி

நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாய கிணற்றில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பள்ளிவாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு கோபி என்ற ஒரு மகன் உள்ளார். அவர் ஆம்னி ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். ராஜேந்திரனுக்கு சொந்தமாக விவசாயம் நிலம் இல்லாததால் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் ஆம்னி வேன் ஓட்ட ராஜேந்திரனுக்கு அவரது மகன் கோபி கற்றுக்கொடுத்தார். அப்போது அங்கிருந்த 70 அடி ஆழ விவசாய கிணற்றில் சுற்று சுவரை உடைத்து கொண்டு தண்ணீருக்குள் வேன் பயந்து விபத்துக்குள்ளானது. கோபி உயிர் தப்பிய நிலையில் ராஜேந்திரன் வேன்னுடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் 8 மணி நேரமாக போராடி மீட்டனர். ராஜேந்திரன் ஆக்சிலேட்டரை அதிகமாக அழுத்தியதால் வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது.

The post நாமக்கல் அருகே தந்தைக்கு, மகன் வேன் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது விபரீதம்: ஆம்னி வேனுடன் கிணற்றில் மூழ்கி தந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Kollimalai Parliwadi ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...