×

பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் தன்னாட்சி கலைக்கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்:

உதவி பேராசிரியர்கள்
(பாட வாரியாக பணியிடங்கள்)
1வரலாறு: 3 இடங்கள் (எம்பிசி-1. எஸ்சி-1, அருந்ததியர்-1)
2ஆங்கிலம்:
1 இடம் (பிசி).
கல்வித்தகுதி: நெட்/செட்/ஸ்லெட்/பி.ஹெச்டி.
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு முதல் மதிப்பெண் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஜாதிச் சான்றிதழையும் அனுப்ப வேண்டும். முன் அனுபவம் சான்றிதழ் இருந்தால் அதையும் இணைத்து அனுப்ப வேண்டும். முன்அனுப சான்றிதழ், தகுதித் தேர்வோ, பிஹெச்டியோ தேர்ச்சி பெற்ற தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியரல்லாத பணிகள் : (Non-Teachning Staff). பணியிடங்கள் விவரம்:
1இளநிலை உதவியாளர்: 3 இடங்கள் (அருந்ததியர்-1, எம்பிசி-1, பொது-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
2டைப்பிஸ்ட்: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி. மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3பண்டக காப்பாளர்: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
4ஆய்வக உதவியாளர்: 6 இடங்கள் (பொது-1, அருந்ததியர்-1, எம்பிசி-1, பிசி-1, எஸ்சி-1, பொது (ஆதரவற்ற விதவை)-1. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
5பதிவறை எழுத்தர்: 2 இடங்கள் (பொது-1, அருந்ததியர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
6நூலக உதவியாளர்: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
7அலுவலக உதவியாளர்: 2 இடங்கள் (பொது-1, அருந்ததியர்-1). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு மற்றும் ஊதிய விகிதம் தமிழ்நாடு அரசு விதிகளின்படி அளிக்கப்படும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.apacwomen.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி,
சின்னக்கலையம்புத்தூர், பழனி- 624 615. திண்டுக்கல் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.10.2023.

The post பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகள் appeared first on Dinakaran.

Tags : Palaniandwar Women's Art College ,Arulmiku Palaniyanadvar Women's Autonomy ,Palani, Dindigul District ,Hindu Religious Charity Department ,Tamil Nadu Government ,Paniyandwar Women's College of Art, Non-Teacher Works ,Dinakaraan ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது