×

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது, அது அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஏற்கனவே மனு அளித்துள்ளதால் தமிழ்நாடு அரசை அணுகும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய முனுசாமி என்பவரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை சமீபத்தில் பீகார் மாநில அரசு வெளியிட்டது இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இட ஒதுக்கீட்டில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இதன் மூலம் ஒற்றுமையை வலுப்படுத்தும் ஜனநாயகத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் படி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Chennai ,Sathiwari ,
× RELATED போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு...