×

டிஆர்டிஓ ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ்

ஒடிசா மாநிலம், சண்டிப்பூரில் உள்ள டிஆர்டிஓ இன்டகரேட்டட் டெஸ்ட் ரேஞ்ச் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பி.இ.,/டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி:

1Graduate Apprentice. 6 இடங்கள். உதவித் தொகை ₹9,000. தகுதி: CSE/IT/Computer Technology/Communication & Computer Technology ஐ முக்கிய பாடமாகக் கொண்டு பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும்.
2Graduate Apprentice: 12 இடங்கள். உதவித் தொகை: ₹9,000. தகுதி: Safety Engineering/Electronics Engineering/Electronics & Telecommunicaiton Engineering/Instrumentation Technology/Electronics & Computer Engineering/Applied Electronics/Embeeded Systems/Robotics Electronics Engineering/ Electrical Engineering/Civil/Aerospace Engineering பாடத்தில் பி.இ.,/பிடெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3Graduate Apprentice: 12 இடங்கள். உதவித் தொகை ₹9,000. தகுதி: Library Science/Business Administration/Financial Accounting/Financial Management/Cost Accounting பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
4Technician Apprentice: 9 இடங்கள். உதவித் தொகை: ₹8,000. தகுதி: CSE/IT/Computer Technology/Information Science & System Engineering/Computer Science & IT ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5Technician Apprentice: 15 இடங்கள். உதவித் தொகை ₹8,000. தகுதி: Electronics/Electronics & Telecommunication/Instrumentation Technology/Electronics & Communication Engineering/ Applied Electronics & Instrumentation/Robotics Engineering/Embedded System/Electronics & Electrical Communication/Electrical Engineering/Civil Engineering/Cinematography/Medical Lab Technology ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக டிஆர்டிஓ அமைப்பால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். 2019ம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.10.2023.

The post டிஆர்டிஓ ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Tags : TRDO Missile Research Center ,TRTO Integrated Test Range Missile Research Centre ,Chandipur, Odisha State ,Dinakaraan ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...