- சென்னை சைதாப்பேட்டை
- சென்னை
- சாய்பேட்டை, சென்னை
- சென்னை சைதாப்பேட்டை மண்டலம்...
- சைதாப்பேட்டை
- சரண்
- தின மலர்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அப்போது மழைக்காக ஒதுங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு . மேற்கூரையின் அடியில் சிக்கி காயம் அடைந்த 20 பேர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.19 பேரில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற 5 வயது ஆண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார், மேலாளர் வினோத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார், சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் சரணடைந்தார்.
The post சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்: உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.