×

2வது நாள் மாநாடு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் 2வது நாளாக நடைபெறும் மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அரசு கொண்டுவரும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட ஆட்சியர்களின் பணி மிக மிக முக்கியமானதாகும்.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளோடு 2 நாள் மாநாடு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்றைய தினம், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார்.

நேற்று மாலை ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post 2வது நாள் மாநாடு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammed ,c. ,Stalin ,Chennai ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...