×

ஆந்திர மாநிலம் நாகனப்பள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்: தெரு நாயை சிறுத்தை வேட்டையாடியதால் கிராம மக்கள் அச்சம்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நாகனப்பள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திரா கர்நாடகா மாநில எல்லையை ஒட்டிய வீக்கோட்டா என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறிவந்த நிலையில் மாவத்தூர் மற்றும் நாகனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று இரவு சிறுத்தை தென்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற பாலா என்பவர் சிறுத்தையை புகைப்படம் எடுத்த நிலையில் அங்குள்ள தெருநாய்களையும் அடித்து சாப்பிட்டு இழுத்து சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வீக்கோட்டா போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் கால் தடங்களை சேகரித்தனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இரவு நேரத்தில் தனியாக வெளியே வரவேண்டாம் என அறிவித்துள்ளனர். சிறுத்தையை வனப்பகுதி அல்லது கர்நாடக எல்லைக்கு அனுப்புவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post ஆந்திர மாநிலம் நாகனப்பள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்: தெரு நாயை சிறுத்தை வேட்டையாடியதால் கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : AP ,Nagan Palli village ,Andhra Pradesh ,Andhra Karnataka ,Dinakaraan ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் வாக்கு...