×

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி..!!

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் விமான நிலையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிகாலை 1.30 மணி முதல் தகவல் சேவை பெறமுடியாமல் சர்வர் ஸ்தம்பித்தது.

இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமானநிலைய ஊழியர்கள் போர்டிங் பாஸ்களை கையால் எழுதி கொடுத்தனர். இதனை பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக விமானங்கள் புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதில் துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக சென்றன. மேலும் அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி போன்ற 12 உள் நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு புறப்பாடு சீரானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Chennai Meenambakkam ,
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...