×

அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர் கைது

 

கோவை, அக். 4: கோவை சரவணம்பட்டி சங்கரப்பன் தோட்டத்தை சேர்ந்தவர் அமின் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர் காளப்பட்டியில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் காளப்பட்டி மோகன் நகர் 5வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 சிறுவர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி அமினின் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க முயன்றனர். அவர்களை கீழே தள்ளிவிட்ட அமின் அந்த வழியாக சென்ற சிலர் உதவியுடன் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றார்.

ஆனால், அவர்கள் அமினை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் அமினுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அமினை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்றது சரவணம்பட்டி மற்றும் காளப்பட்டியை சேர்ந்த 17, 16 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

The post அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Amin ,Sangarappan Estate ,Saravanampatti, Coimbatore ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு