×

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு காரணமான உயர் ரத்த அழுத்தத்துக்கு ஊடுருவும் நுண்குழாய் முறையில் நவீன சிகிச்சை: அப்போலோ நிர்வாக துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி தகவல்

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில்: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ஆயுட்காலத்தை மேம்படுத்தும் மருத்துவ நடைமுறைகளுக்கு உதவும், ரெனல் டினெர்வேஷன் எனப்படும் அதிநவீன சிகிச்சை மேற்கொண்டிருக்கிறது. ரெனல் டினெர்வேஷன் என்பது, மருத்துகளால் பலன் இல்லாத சூழலில் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் குறைந்த பட்ச ஊடுருவும் நுண்குழாய் அடிப்படையிலான மருத்துவ நடைமுறை. மருந்துகளை உட்கொண்டு வரும்போதும், உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, ரத்த அழுத்தம் சம்பந்தமான இதர பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையிலான இந்த மருத்துவ நடைமுறை தமிழ்நாட்டில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6 விதமான மருந்துகளை எடுத்து கொண்ட போதிலும், கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 73 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு இந்த அதிநவீன மருத்துவ நடைமுறை சமீபத்தில் செயல்படுத்தப்பட்டது. மருந்துகள் செயல்படும் நிலையில் , ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையான டயட்டை பின்பற்றிய நிலையிலும், அந்தப் பெண்மணிக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருந்தது. அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்களின் குழு, அப்பெண்மணிக்கு ரெனல் டினெர்வேஷன் மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள முடிவு செய்தது. இந்த மருத்துவ நடைமுறையின் படி, வயிறும் தொடையும் சேரும் இடுப்பு பகுதியில் ஒரு ஊசி அளவில் நுண் துளையில் ஒரு சிறிய குழாய் செருகப்பட்டது.

அந்த நுண் குழாயானது சிறுநீரக தமனிகளில் வைக்கப்பட்டு, அந்த பகுதியில் நரம்புகளின் முடிவு முனைகளை சரிசெய்ய ரேடியோ அதிர்வெண் அடிப்படையிலான நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த சிகிச்சையின் வெற்றிக்காக அப்போலோ மருத்துவர் குழுவை வாழ்த்துகிறேன். பலர் இந்த உயர் ரத்த அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதால், இந்த குழுவின் முயற்சிகள் பொது சுகாதாரத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிகிச்சைகளை மேம்படுத்த உதவும் என்றார். டாக்டர் ரெபாய் செளகத்அலி உடனிருந்தார்.

The post மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு காரணமான உயர் ரத்த அழுத்தத்துக்கு ஊடுருவும் நுண்குழாய் முறையில் நவீன சிகிச்சை: அப்போலோ நிர்வாக துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி தகவல் appeared first on Dinakaran.

Tags : Apolo ,Executive Vice President ,Bretha Reddy ,Apollo Hospitals Group ,Apollo ,Preita Reddy ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...