×

இந்தோனேஷியாவில் சர்வதேச கராத்தே போட்டி தஞ்சாவூர் கல்லூரி மாணவி 3ம் இடம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டை ஷர்மிளா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னையன். தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் தேவதர்ஷினி. இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த செப்.22 முதல் 24ம் தேதி இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் மூன்றாம் பரிசு வென்றார். இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் மாணவி தேவதர்ஷினி இந்தோனேசியா சென்று பங்கேற்பதற்காக தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச கராத்தே போட்டியில் மாணவி தேவதர்ஷினி வென்ற மூன்றாம் பரிசு பெற்றார். இதையடுத்து தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன், திருவோணம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மகேஷ்கிருஷ்ணசாமி ஆகியோரை மாணவி தேவதர்ஷினி சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், மாணவரணி அமைப்பாளர் ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

The post இந்தோனேஷியாவில் சர்வதேச கராத்தே போட்டி தஞ்சாவூர் கல்லூரி மாணவி 3ம் இடம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur College ,International Karate Competition ,Indonesia ,Thanjavur ,Chinnaiyan ,Matakottai Sharmila Nagar ,Thanjavur district ,Devdarshini ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியா ஓபன் சிந்து ஏமாற்றம்