×

அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜ முயற்சி சந்திரயானை எழுப்ப முயற்சிப்பது போன்ற ஒரு முயற்சி நடக்கிறது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜ முயற்சித்து வருகிறது என்றும், அதுவும் சந்திரயானை எழுப்ப விஞ்ஞானிகள் எப்படி முயற்சிக்கிறார்களோ அதேபோன்ற ஒரு முயற்சி நடக்கிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நுங்கம்பாக்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விடுமுறையின் போது சொந்த ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் கொள்ளைடிக்கின்றன. அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். கொஞ்சம் காத்திருந்தால் நாங்கள் எதிர்பார்த்த தகவல் வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் கதவுகள் மூடப்பட்டு விட்டது என்று இருக்காது. 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின்பு கூட்டணியை புதுப்பிக்க வாய்ப்புள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி, பாஜ மேலிடம் கொஞ்சம் அப்செட்டாகத் தான் இருப்பதாக சொன்னார்கள்.

அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க மாட்டார்கள். சந்திரயான் லேண்டரை எழுப்ப விஞ்ஞானிகள் எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோன்ற ஒரு முயற்சியை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிமுகவின் ஆதங்கத்தை பாஜ தலைமை புறக்கணித்து விடாது. டெல்லி தகவல்கள் நல்லதாக வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாள் காத்திருந்தால் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்ற சீரியசான நிலைமையை தேசிய பாஜ தலைமை உணர தவறிவிட்டதா என்பது தெரியவில்லை. இந்த அளவுக்கு இதை முற்ற விட்டிருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜ முயற்சி சந்திரயானை எழுப்ப முயற்சிப்பது போன்ற ஒரு முயற்சி நடக்கிறது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme ,Chandrayan ,Krishnasami ,BAJA ,Tamil Nadu ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...