×

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பாவடி செங்குந்தர் அறக்கட்டளை சார்பில், 191 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ₹15 லட்சம் மதிப்பிலான, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்து பேசினார். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். துணைத்தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரர் இளங்கோ, காரியக்காரர்கள், சமுதாயப் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்துணவு முட்டை விலை நிர்ணயம்

The post மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Bhavadi Sengundar Trust ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்