×

பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பில் சிறிய நேர்கல் சுவர்

சீர்காழி:சீர்காழி அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பில் சிறிய நேர்கல் சுவரை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து, கடற்கரை பரப்பு கரைந்து வந்தது. இதனை தடுக்க கருங்கல் தரப்புச்சுவர் அமைக்க வேண்டி அப்பகுதி மீனவ மக்கள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறிய நேர்கல் சுவர் மற்றும் மீன்வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்தனை பொதுமக்கள் பயணம் பாட்டிக்காக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து கடற்கரையில் அமைக்கப்பட்ட நேர்கல் சுவரை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், சீர்காழி ஒன்றிய குழத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார், பிரபாகரன், ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், விகேஸ்வரன், மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் முருகன், நாங்கூர் பழனிவேல் மற்றும் அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பில் சிறிய நேர்கல் சுவர் appeared first on Dinakaran.

Tags : Pudukkuppam ,Sirkazhi ,Minister ,Meiyanathan ,Pudukpam ,Pudkuppam ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!