×

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 7ம் தேதி நடக்கிறது: பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்

சென்னை: ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வரும் 7ம் தேதி அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2023-24ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவில் வரும் 7 தேதி காலை 5.00 மணி அளவில் சென்னை தீவுத்திடலில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் 8 கி.மீ. மற்றும் பெண்கள் 5 கி.மீ. அதேபோல 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் 10 கி.மீ. பெண்கள் 5 கி.மீ. என நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு தலா ரூ. 1000 பரிசும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் வயது சான்றிதழ் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் வரும் 5 தேதி வரை நேரு பூங்கா விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.

The post தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 7ம் தேதி நடக்கிறது: பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Sports Development Commission ,Arijar Anna Marathon Competition ,Chennai ,Tamil Nadu Sports Development Authority ,Arinagar Anna Marathon ,
× RELATED தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய...