×

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

சென்னை: அரசியல் கூட்டணி முறிந்த நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளது பாஜ தொண்டர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜ மோதலை தொடர்ந்து கூட்டணியில் இருந்து கடந்த 25ம் தேதி பாஜ அதிரடியாக வெளியேற்றப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஒரு வாரத்துக்கு பிறகு விளக்கம் அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘பாஜ கூட்டணி முறிவு நான் எடுத்த முடிவு இல்லை. அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு’’ என்று அதிரடியாக அறிவித்தார்.

இதனால், அதிமுகவுடன் இணைய பாஜவிற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாஜ தலைவர் அண்ணாமலை 3வது அணி அமைக்கும் முடிவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பாஜ துணை தலைவர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நேற்று பேட்டியளித்துள்ளார். இது குறித்து பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி சென்னை கமலாலயத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவுன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பது பெரியவர்களின் விருப்பமாக உள்ளது’’ என்றார்.

தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து தேசிய தலைமை ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சரியான செய்தியை டெல்லி தலைமை வெளியிடும். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்’’ என்றார். ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ ெவளியேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் வி.பி.துரைசாமி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறியுள்ளது பாஜ தொண்டர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : former vice president ,V. B. ,Duraisami ,senior vice president ,V. B. Duraisami ,Former ,Vice President ,Dinakaraan ,
× RELATED போத்தீஸ் நிறுவனர் காலமானார்