×

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் கர்நாடகா: பாஜ குற்றச்சாட்டு

பெங்களூரு: மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தபின் பயங்கரவாதிகள், ஜிகாத் வழியை பின்பற்றுவோரின் புகலிடமாக கர்நாடகம் மாறியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து பாஜவின் அதிகாரபூர்வமான இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலத்தில் நான்காண்டு காலம் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி நடந்தபோது, பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை ஒடுக்கி வைத்திருந்தோம். தீவிரவாத செயலில் ஈடுபட்டோரை கழுகு கண் பார்வையில் கண்காணித்து, அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தோம். தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் முடங்கி இருந்தனர். போலீசாரின் கண்தப்பி நடந்த ஓரிரு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின், இவ்வளவு காலம் முடங்கி கிடந்த பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஜிகாத் என்ற பெயரில் நாசக்கார செயலில் ஈடுபடுவோர், வெளியில் நடமாட தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்தால், நாட்டில் பயங்கரவாதிகளின் இருப்பிடமாக கர்நாடகம் மாறிவிடும். இதற்கு உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன் ஷிவமொக்கா மாநகரில் நடந்த சம்பவம் சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

The post பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் கர்நாடகா: பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Bengaluru ,Bharatiya Janata Party ,Congress ,Dinakaran ,
× RELATED பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு