×

மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணத்தை இங்கிலாந்து உயர்த்தியது

லண்டன்: இங்கிலாந்து அரசு மாணவர் மற்றும் பயணிகள் விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விசா கட்டணப்படி மாணவர் விசாவுக்கு 490 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 49,500 செலுத்த வேண்டும். ஆறு மாத காலத்துக்குட்பட்ட பயணிகள் விசாவுக்கு 115 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 11,600 செலுத்த வேண்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஜூலை மாதம் இந்த உயர்வு பற்றி அறிவித்ததுடன், பொதுத்துறைகளில் உயர்த்தப்பட்ட சம்பள விகித செலவுகளை சரிக்கட்ட கட்டண உயர்வு அவசியம் என்றார்.

The post மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணத்தை இங்கிலாந்து உயர்த்தியது appeared first on Dinakaran.

Tags : UK ,London ,UK government ,England ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...