×

விளம்பரம் இல்லாமல் வேண்டுமா? பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு மாதம் ரூ.870 கட்டணம்: இங்க இல்ல… ஐரோப்பாவில் அறிமுகம்

லண்டன்: விளம்பரம் இல்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த மாதம் ரூ.870 கட்டணத்தை ஐரோப்பாவில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இணையதளங்களை நிர்வகித்து வருகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு போட்டியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்திலும் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எக்ஸ் பக்கத்தில் புளு டிக் வாங்க கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தவும் கட்டணம் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் இந்த திட்டத்தை மெட்டா நிறுவனம் அமல்படுத்த உள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் எந்தவித விளம்பர இடையூறும் இல்லாமல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் மாதம் ரூ.870 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஒரு கணக்கிற்கு மேல் உள்ள ஒவ்வொரு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்திற்கும் தலா ரூ.523 கூடுதல் கட்டணமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்குத்தான்.செல்போனில் பயன்படுத்தும் கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1133 கட்டணம் செலுத்த வேண்டும். ஏனெனில் கூகுள் உள்ளிட்ட பல்வேறு ஆப்களுக்கு மெட்டா கட்டணம் கொடுக்க வேண்டியது இருப்பதால் இந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விளம்பரம் இல்லாமல் வேண்டுமா? பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு மாதம் ரூ.870 கட்டணம்: இங்க இல்ல… ஐரோப்பாவில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Instagram ,Europe ,London ,Meta ,Europe.… ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...