×

சில்லி பாயிண்ட்………….

பேட்மின்டனில் நம்பிக்கை

* ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மின்டன் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

* மகளிர் இரட்டையர் பேட்மின்டன் பிரிவில் த்ரீஸா ஜாலி – காயத்ரி கோபிசந்த், தனிஷா கிராஸ்டோ – அஷ்வினி பொன்னப்பா ஜோடிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

* மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் தாய்லாந்தின் பெய்சன் மனிகோனை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திரம் லவ்லினா போர்கோஹைன் ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடத்தையும் உறுதி செய்து அசத்தியுள்ளார்.

* மகளிர் பாக்சிங் 54 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் வெண்கலம் வென்றார்.

* ஆண்கள் பாக்சிங் +92 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

* வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், அபிஷேக் வர்மா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

The post சில்லி பாயிண்ட்…………. appeared first on Dinakaran.

Tags : India ,Pranai ,Kidambi ,Asian Games ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...