×

என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் சிபிஐ, ஐடி, இடி தவிர பா.ஜவுடன் இருப்பது யார்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் ராமராவ் பதிலடி

ஐதராபாத்: என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் பா.ஜவுடன் சிபிஐ, ஐடி, இடி தவிர இருப்பது யார் என்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் கேடி ராமராவ் கேள்வி எழுப்பி உள்ளார். தெலங்கானாவில் பிரதமர் மோடி நேற்று பேசும் போது,’ தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஆர்எஸ் சேர முதல்வர் சந்திரசேகரராவ் தூது விட்டார்’ என்றார். இதற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் மகனும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், அமைச்சருமான கே.டி.ராமாராவ் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் போன்றது. எங்கள் கட்சி அதில் சேர விரும்பவில்லை.

அனைத்து கட்சிகளும் உங்களை விட்டு வெளியேறும்போது நாங்கள் ஏன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புகிறோம். சிவசேனா உங்களை விட்டு வெளியேறியது. ஐக்கிய ஜனதா தளம்உங்களை விட்டு வெளியேறியது. தெலுங்கு தேசம் உங்களை விட்டு வெளியேறியது. சிரோமணி அகாலி தளம் உங்களை விட்டு விலகி விட்டது. சிபிஐ, ஐடி மற்றும் இடி தவிர இப்போது உங்களுடன் யார் இருக்கிறார்கள். ஆனால் கேசிஆர் ஒரு போராளி, ஏமாற்றுபவர் அல்ல. உங்களைப் போன்ற தலைவர்களுடனும், உங்களைப் போன்ற கட்சிகளுடனும் அவர் ஒருபோதும் பணியாற்ற மாட்டார். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

The post என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் சிபிஐ, ஐடி, இடி தவிர பா.ஜவுடன் இருப்பது யார்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் ராமராவ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : NDA alliance ,CBI ,BJP ,Minister Rama Rao ,PM Modi ,Hyderabad ,Modi ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...