×

பொற்கோயிலில் பக்தர்களுக்கு சேவை செய்த ராகுல்காந்தி

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலில் 2 வது நாளாக வழிபாடு செய்த ராகுல்காந்தி, அங்கு வந்த பக்தர்களுக்கு சேவையாற்றினார். பஞ்சாப் மாநிலத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி அரசிடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் எனப்படும் சீக்கிய குருத்வாராவிற்கு நேற்று முன்தினம் சென்று வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ராகுல்காந்தி குருத்வாராவிற்கு சென்றார். அங்குள்ள உணவுவிடுதிக்கு சென்ற ராகுல்காந்தி, பக்தர்களுக்கு சேவையாற்றினார். அங்கு வந்த பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கியதோடு உணவு பரிமாறினார். மேலும் சமையல் கூடத்துக்கு சென்ற அவர், அங்குள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து காய்கறிகளை சுத்தம் செய்தல், நறுக்குதல், பாத்திரங்களை கழுவுவதில் உதவினார். பின்னர் குருத்வாராவில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்ட அவர், பல்லக்கு தூக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

The post பொற்கோயிலில் பக்தர்களுக்கு சேவை செய்த ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Ragulkanthi ,Golden Temple ,Rakulkanthi ,Punjab Golgoyle ,Punjab ,Dinakaraan ,
× RELATED தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கும்,...