×

சிப்காட் தொழிற்பேட்டையில் ரசாயண வாயு கசிவு: மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சிறிதளவு வாயு வெளியேறியதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் குப்பை தொழிற்சாலை, இரும்பு உருக்கு ஆலை, ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஏற்கனவே மருத்துவ, பயோமெட்ரிக் கழிவுகளாலும், குப்பை சேமிப்பு தொழிற்சாலையிலிருந்தும் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவது வழக்கம்.

இந்நிலையில், கெமிக்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து நேற்று காலை திடீரென வாயு கசிந்ததாகவும் அதனால், தூற்நாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதனால் அருகே இருந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் சாலைக்கு உடனே ஓடிவந்துள்ளனர். இது சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மாசுக்காட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாசுக்காட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுமார் 10 நிமிடம் இந்த வாயு உணரப்பட்டதாக தெரிய வந்தது. பின்னர் நிலைமை சீரானது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிப்காட் தொழிற்பேட்டையில் ரசாயண வாயு கசிவு: மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chipkot industrial estate ,Kummidipoondi ,control ,Chipkot ,Industrial Estate ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...