×

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கொண்டு சட்டீஸ்கர், மபி-க்கு வேட்பாளர்களை அறிவித்த ஆம்ஆத்மி: காங். இன்னும் அறிவிக்காததால் குழப்பம்

புதுடெல்லி: சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திற்கு தனது வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை ஆம்ஆத்மி வெளியிட்டுள்ளதால், காங்கிரஸ் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலுக்கான தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே மேற்கண்ட இரு மாநிலங்களுக்கும் தலா 10 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அறிவித்தது.

தற்போது மத்தியப் பிரதேசத்திற்கு 29 வேட்பாளர்களின் பெயர்களையும், சட்டீஸ்கருக்கு 12 வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது. சட்டீஸ்கரில் ஆளுங்கட்சியாக காங்கிரசும், மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருவதால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு மத்தியில் மேற்கண்ட இருமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பாஜக – காங்கிரசுக்கு இடையே தான் கடுமையான போட்டி இருக்கும். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி தனியாக வேட்பாளர்களை அறிவித்து வருவதால், அது எதிர்கட்சிகளின் தேர்தல் வெற்றியை பாதிக்குமா? என்பது கேள்வியாக உள்ளது.

The post ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கொண்டு சட்டீஸ்கர், மபி-க்கு வேட்பாளர்களை அறிவித்த ஆம்ஆத்மி: காங். இன்னும் அறிவிக்காததால் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,India' alliance ,MABI ,Aamadmi ,Kong ,NEW DELHI ,Congress ,Amadmi ,Madhya Pradesh ,India ,Dinakaraan ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை