×
Saravana Stores

மில்லட் அடை அவியல்

தேவையானவை:

கடலை பருப்பு, துவரம் பருப்பு – தலா 1 கப்
பயத்தம் பருப்பு – முக்கால் கப்
மல்டி மில்லட் மாவு – 1 கப்
பூண்டு – 5 பல்
பெருங்காயம் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கடலை பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, ஊறிய பருப்புடன் பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அரைத்த மாவுடன் மல்டி மில்லட் மாவை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, அடை மாவு பதத்திற்கு கலந்துகொண்டு அடையாக ஊற்றி சிவந்ததும் எடுக்க வேண்டும்.

The post மில்லட் அடை அவியல் appeared first on Dinakaran.

Tags : Millett Adel ,
× RELATED மேகி தோசை