×

விஐபி வழித்தடங்களில் குண்டுவெடிக்க சதி; ஐஎஸ் ஆதரவு 3 இன்ஜினியரிங் பட்டதாரிகள் கைது: டெல்லியில் என்ஐஏ அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பொறியியல் பட்டதாரிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஆதரவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கும், ெடல்லி போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

அதையடுத்து அவர்கள் ஐஎஸ் ஆதரவாளர்ளான முகமது ஷாநவாஸ் ஆலம் என்கிற முகமது இப்ராகிம் (31), முகமது ரிஸ்வான் அஷ்ரப் (28), முகமது அர்ஷத் வர்சி (29) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஷாநவாஸ், விஐபி அரசியல் தலைவர்களின் வழித்தடங்கள் மற்றும் மும்பை, சூரத், வதோதரா, காந்திநகர், அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்தார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் பிறந்த ஷாநவாஸ், நாக்பூரில் பி.டெக் முடித்தார்.

அதன்பின் ெடல்லி வந்த அவன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சித்தாந்ததால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பின் ஆதரவாளராக மாறினார். மற்றொரு குற்றவாளியான முகமது அர்ஷத் வர்சியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் எம்பிஏ முடித்த பிறகு, அங்கு இஸ்லாமிய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அதன்பின் ஷாநவாசும் வர்சியும் நண்பர்களாகி, ஐஎஸ் அமைப்புக்காக வேலை பார்த்தனர். அவர்களுடன் மூன்றாவது குற்றவாளியான ரிஸ்வான் அஷ்ரப், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் பிறந்தவர். அவன் காஜியாபாத்தில் உள்ள கல்லூரியில் பி.டெக் முடித்ததாகவும், மேற்கண்ட இருவருடன் சேர்ந்து தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக தேசிய புலனாய்வு முகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விஐபி வழித்தடங்களில் குண்டுவெடிக்க சதி; ஐஎஸ் ஆதரவு 3 இன்ஜினியரிங் பட்டதாரிகள் கைது: டெல்லியில் என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Tags : IS ,NIA ,Delhi ,New Delhi ,National Intelligence Agency ,ISIS ,Delhi.… ,Dinakaran ,
× RELATED கல்வியைவிட உயர்வானது எது?