×

2023 இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு..!!

ஸ்டாக்ஹோம்: 2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. இயற்பியல் விஞ்ஞானிகள் அகோஸ்தினி, ஃபெரங்க், ஆனி லா-ஹுலியர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞாளிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுக்காக 3 இயற்பியல் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post 2023 இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : USA ,Germany ,Sweden ,Stockholm ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!