×

ஆசிய விளையாட்டுப் போட்டி.. இதுவரை 62 பதக்கங்களை வேட்டையாடிய இந்தியா .. வில்வித்தையில் 3 பதக்கங்கள் உறுதி!!

ஹாங்சு : ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார். இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

*கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றனர்.

*ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

*ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வில்வித்தையில் இந்திய வீரர்களான அபிஷேக் வர்மா, பிரவீன் ஓஜாஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு முன்னேறினர். இதன் மூலம் வில்வித்தையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் உறுதியானது.

*வில்வித்தைப் போட்டியின் பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்ணம், சக வீராங்கனை அதிதியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

The post ஆசிய விளையாட்டுப் போட்டி.. இதுவரை 62 பதக்கங்களை வேட்டையாடிய இந்தியா .. வில்வித்தையில் 3 பதக்கங்கள் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,India ,Hangzhou ,Preeti Pawar ,Asian Games Boxing ,Dinakaran ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...