- DDF
- வாசன் ஜமின் கோரி
- சென்னை உயர் நீதிமன்றம்
- வாசன் ஜாமின் கூரி
- Icourt
- யூடியூபர்
- வாசன் ஜாமின்
- தினகாரான்
சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். டிடிஎஃப் வாசனின் காவல் இன்று நிறைவு பெறுவதை ஒட்டி காஞ்சிபுரத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே கசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டி.டி.எஃப். வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசன் தரப்பில் 2 முறை ஜாமின் கேட்டு ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி டி.டி.எஃப். வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 3 வது முறையும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.
The post யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.