×
Saravana Stores

சீனா நிதி உதவியுடன் இந்தோனேஷியாவில் அதிவேக ரயில் அறிமுகம்: மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும்

ஜகார்த்தா: சீனா நிதி உதவியுடன், தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில் இந்தோனேஷியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அடிக்கடி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் இந்தோனேஷியாவில், ஜகார்த்தா மற்றும் மேற்கு ஜாவா மாகாணத்தின் பண்டுங் நகரை இணைக்கும் 142 கிமீ தொலைவைக் கொண்ட அதிவேக ரயில் பாதை நேற்று திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில் சேவையை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார். இந்த ரயில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஜகார்த்தா-பண்டுங் இடையேயான பயண தூரம் 3 மணி நேரமாக இருக்கும் நிலையில், அதிவேக ரயில் மூலம் வெறும் 40 நிமிடத்தில் பயணிக்க முடியும்.

இந்த ரயில் பாதையை அமைக்க பெரும்பானா நிதியை சீன ரயில்வே அமைச்சகம் தந்து உதவி உள்ளது. இத்திட்டம் கடந்த 2016ல் தொடங்கி 2019ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப் போனது. அதுமட்டுமின்றி, முதலில் ரூ.35.2 கோடியாக இருந்த செலவு, பின்னர் ரூ.60 கோடியாக அதிகரித்தது. ஒருமுறை 601 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் ரூ.1,300ல் இருந்து ரூ.1850 வரை இருக்கும் என கூறப்படுகிறது. இன்னும் டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்படவில்லை.

The post சீனா நிதி உதவியுடன் இந்தோனேஷியாவில் அதிவேக ரயில் அறிமுகம்: மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் appeared first on Dinakaran.

Tags : Indonesia ,China ,Jakarta ,Southeast Asia ,
× RELATED இந்தோனேசியாவின் 8வது அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு