×

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ISRO விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன். ஜெ.ஆசிர் பாக்கியராஜ். மு.வனிதா உள்ளிட்டோருக்கு பாராட்டு நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது. தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள். உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள் தமிழர்கள். சந்திரயான்-3 திட்டம் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறந்தது. இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி வனிதா. 7.5% ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு ‘சாதனை விஞ்ஞானி’ எனும் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும். தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உழைப்புக்கான அங்கீகாரமாக கருதி இதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ISRO ,CM ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...