×

பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் திருமயம் அருகே புனித உபகார மாதா ஆலய தேர்பவனி

திருமயம்: திருமயம் அருகே நடைபெற்ற புனித உபகார மாதா ஆலய திருத்தேர் பவனி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள எளனாப்பட்டி கிராமத்தில் வீரமாமுனிவரால் நிறுவப்பட்ட சுமார் 400 ஆண்டு பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டு உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெறும் பத்து நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பங்கு தந்தைகளின் சிறப்பு திருப்பலி, மறையுறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டுபாடல் திருப்பலி நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் புனித உபகார மாதா திருத்தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உபகார மாதா மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து எளனாப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. அப்போது ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் புனித உபகார மாதாவிற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. புனித உபகார மாதா ஆலய திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளானோர் திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதனிடையே நேற்று திருவிழா திருப்பலியும் கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானத்துரை, காரியஸ்தர் சந்தனராசு, கணக்குப்பிள்ளை ராஜேந்திரன் மற்றும் எளனாப்பட்டி, தாளப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் திருமயம் அருகே புனித உபகார மாதா ஆலய தேர்பவனி appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Upakara Mata Temple Therpavani ,Tirumayam ,Tirutheer Bhavani festival ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...