×

நத்தம் அருகே சிறுகுடியில் இலவச மருத்துவ முகாம்

நத்தம், அக். 2: நத்தம் அருகே சிறுகுடியில், சிறுகுடி ஊராட்சி மற்றும் திண்டுக்கல் எம்.எம். சிறுநீரக மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் கோகிலவாணி வீரராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பாலமுருகன், அர்ச்சனா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் சிறுநீர், ரத்தம் போன்றவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். மேலும் இசிஜி, உப்புச்சத்து அளவு, 3 மாத சர்க்கரை அளவுகள் சோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சிறுகுடி, பூசாரிபட்டி, நல்ல கண்டம், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். ஊராட்சி செயலர் வீரபாண்டி நன்றி கூறினார்.

The post நத்தம் அருகே சிறுகுடியில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Sirukudi ,Nattam ,Natham ,Nutham ,Sirukudi Panchayat ,Dindigul ,Sirugudi ,Dinakaran ,
× RELATED நத்தம்-துவரங்குறிச்சி வழித்தடத்தில்...