×

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை, அக். 2:மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 99வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் தலைமையில் வர்த்தக சங்கத்தின் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் 100வது ஆண்டான 2023-24ன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தலைவராக என்.ெஜகதீசன், செயலாளராக எஸ்.தர், பொருளாளராக ஏ.சுந்தரலிங்கம், துணைத்தலைவர்களாக ஜெ.செல்வம், பா.ரமேஷ் மற்றும் டி.எஸ்.ஜீயர் பாபு, இணைச் செயலாளர்களாக எம்.ஏ.ராஜீவ், ஜி.கணேசன் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல் 99வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்துடன் பதவிக்காலம் முடிவடைந்த செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.அழகுராஜ், டி.தனுஷ்கோடி, ஜி.இளங்கோவன், ஜி.கணேசன் (பார்மா), பி.டி.ஜானகிராமன், டாக்டர் என்.ஜெகதீசன், பி.கண்ணதாசன், பி.மகாலிங்கம், ஆர்.பிரபாகரன், ஏ.புருஷோத்தமன், பா.ரமேஷ், பி.வி.ரமேஷ்பாபு, பா.சரவணபாலன், எஸ். ஸ்ரீதர், ஏ.சுந்தரலிங்கம் ஆகிய 15 பேரும் மீண்டும் ஏகமனதாக செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக டாக்டர் என்.ஜெகதீசன் போட்டியின்றி, ஏகமனதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

The post தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Industry and Trade Association ,Madurai ,Annual General Committee Meeting ,Madurai Association ,President ,Tamilnadu Industry and Trade Association ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...