×

மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து அரசு ஊழியர் சங்கம் வரவேற்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில செயலாளர் சுமதி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் அந்துவன்சேரல் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். துணை தலைவர்கள் அருளேந்திரன், பாஸ்கரன் ஆகியோர் தீர்மானங்களை வசித்தனர்.

மாநில செயலாளர் டானியல்ஜெயசிங் பேசினார். மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம், மகளிர் பயணம் செய்ய இலவச பஸ் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பது. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதை வரவேற்கிறோம். நு£ற்றாண்டு பழமை வாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜம்ரூத்நிஷா, உதயக்குமார், துர்க்காம்பிகை மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைதலைவர் ராஜூ நன்றி கூறினார்.

The post மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து அரசு ஊழியர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Sri Lanka Shipping Government Employees Association ,Tamil Nadu Government Employees Union ,Sri Lanka Congestion Department ,God Shipping Government Employees Union ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி