×

குல கல்வியை கொடுப்பது குஜராத் மாடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி: கி.வீரமணி பேச்சு

 

பெரம்பூர், அக்.2: சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் ஏற்பாட்டில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மேயர் பிரியா, மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதிச் செயலாளர் சாமிக்கண்ணு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில், ‘‘கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய், இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் ஆகியவற்றை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது. அனைவருக்கும் கல்வி கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி.
ஆனால் குஜராத் மாடல் குல கல்வியை கொடுக்கிறது’’ என்றார்.

The post குல கல்வியை கொடுப்பது குஜராத் மாடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி: கி.வீரமணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Gujrat ,government ,Dravida model government ,G.Veeramani ,Perambur ,Chennai East District DMK Youth ,Lokesh Napapad ,
× RELATED திராவிட மாடல் அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு: காதர் மொகிதீன் உறுதி