×

தற்கொலை படை தாக்குதல் எதிரொலி தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவோம்: பாக்.ராணுவ தளபதி சபதம்

இஸ்லாமாபாத்: ராணுவ நடவடிக்கையின் மூலம் தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி சையது அசீம் முனிர் சபதம் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே கடந்த 28ம் தேதி பயங்கர தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதே நாளில் கைபர் பக்துன்வா மாகாணம் ஹாங்கு நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அருகே உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.இந்நிலையில், குவெட்டாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டின் ராணுவ தளபதி சையது ஆசிம் முனீர் நேற்று பேசுகையில் ‘‘.இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களின் உதவியுடன் இத்தகைய செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த தீய சக்திகள் அரசு மற்றும் பாதுகாப்பு படையின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்கள். நாட்டில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தல்களை வேரறுக்கும் வரையில் ஓயமாட்டோம்’’ என்றார்.

The post தற்கொலை படை தாக்குதல் எதிரொலி தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவோம்: பாக்.ராணுவ தளபதி சபதம் appeared first on Dinakaran.

Tags : Pak Army ,Commander ,Islamabad ,Pakistan Army ,Syed Azeem Munir ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...