×

இந்தியா- அமெரிக்கா உறவு சந்திரயானை போல் நிலவுக்கு செல்லும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்க நாடுகளின் உறவு சந்திரயானை போல் நிலவு வரை செல்லும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள இந்தியா அவுஸில் நேற்றுமுன்தினம் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில்,‘‘‘ இந்திய- அமெரிக்க உறவு இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. அமெரிக்காவில் சொல்வதை போல் நீங்கள் இன்னும் எதையும் பார்க்கவில்லை. இந்த உறவை வேறொரு நிலைக்கு கொண்டு செல்ல போகிறோம். பரவலாக நல்ல விஷயங்கள் நடக்கும் போது, அதை நடத்துபவருக்குதான் அந்த பெருமை கிடைக்கும்.அது நியாயமானது. ஜி 20 க்காக அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து உழைத்ததால் மாநாடு வெற்றியடைந்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த ஆதரவு,புரிதல் மற்றும் பங்களிப்பு தான் இதற்கு காரணமாகும். இது ஜி20 வெற்றி இந்திய அமெரிக்க நட்புறவின் வெற்றியாகும்.சந்திரயானை போல் இந்த உறவு நிலவு வரை அல்லது அதற்கு மேலும் செல்லும்’’ என்றார்.

The post இந்தியா- அமெரிக்கா உறவு சந்திரயானை போல் நிலவுக்கு செல்லும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,US ,Chandrayaan ,Union Minister ,Jaishankar Perumitham ,Washington ,Union External Affairs Minister ,Jaishankar ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது