×

சிவாஜி பிறந்த நாளையொட்டி முதல்வர் வாழ்த்து

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” 96வது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்.

The post சிவாஜி பிறந்த நாளையொட்டி முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shivaji ,Chennai ,M. K. Stalin ,Thilakam Sivaji ,M.K.Stalin ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...