×

விசிக சார்பில் ஜனநாயக மாநாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 2024 மே திங்களில் நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெள்ளிவிழா ஆண்டு ஆகும். இந்நிலையில் ‘இந்தியா கூட்டணி’ என்னும் பெயரில் அது பெயர் கொண்டு எழுந்து நிற்கிறது. நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ‘வெல்லும் இந்தியா: வெல்லும் சனநாயகம்’ என்னும் நம்பிக்கை மலர்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியின் அதன் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. நாடாளுமன்ற சனநாயகப் பாதையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவெய்துவதையொட்டி விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியல் வெள்ளி விழாவாகவும் கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழாவாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.

இம்மாநாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கார்கே , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post விசிக சார்பில் ஜனநாயக மாநாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Democratic ,Conference ,VISA ,India Alliance ,Chief Minister ,M.K. Stalin ,President ,Thirumavalavan ,Chennai ,Liberation Tigers Party ,
× RELATED சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி...