×

ஆசிய விளையாட்டு போட்டி பதக்க வேட்டையில் இந்தியா அரை சதம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில், நேற்று ஒரே நாளில் ஒரு டஜனுக்கும் அதிகமான பதக்கங்களைக் குவித்த இந்தியா பதக்க எண்ணிக்கையில் அரை சதம் கடந்து அசத்தியது. சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் தொடங்கி ஒரு வாரமாகி உள்ள நிலையில் படகு போட்டி, துப்பாக்கிசுடுதலில் அதிக அளவிலான பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடம் வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று ஒரே நாளில் ஒரு டஜனுக்கும் அதிகமான பதக்கங்களை குவித்தனர்.

துப்பாக்கிசுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மகளிர் கோல்ப், ஆண்கள் குழு பேட்மின்டன் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியது. ஆண்கள் குண்டு எறிதலில் களமிறங்கிய இந்திய வீரர் தூர் தஜிந்தர்பால் சிங் 20.36 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சவுதி அரேபியாவின் டோலோ முகமது (20.18 மீ.) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் லியு யாங் (19.97 மீ.) வெண்கலமும் வென்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவிக்கும் வாய்ப்பு உள்ளதால், 2018ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்று படைத்த சாதனையை இந்தியா இம்முறை முறியடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு போட்டி பதக்க வேட்டையில் இந்தியா அரை சதம் appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Hangzhou ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...