×

நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்: சென்னை கோட்டம் அறிவிப்பு!

சென்னை: நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும் என சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயக்கப்பட உள்ளது. காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குழிப்பில் தெரிவித்ததாவது: காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை திங்கள்கிழமை சென்ளை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பாணிகளும் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்: சென்னை கோட்டம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai Gotam ,Chennai ,Arakkonam ,
× RELATED ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி:...