சென்னை: அக்டோபர் 1 முதல் பாமக சார்பில் மாவட்ட பொதுக்குழு, ஒன்றிய, கிராம கூட்டங்களை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாமக செயல்திட்டத்தின்படி, அக்டோபர் 5ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 8ம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவை தேர்தலுக்கான செயல் திட்டங்கள், வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post பாமக சார்பில் மாவட்ட பொதுக்குழு ஒன்றிய, கிராம கூட்டங்கள் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.