×

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 4ம் தேதி பழைய வாகனங்கள் பொதுஏலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத வாகனங்கள் வரும் 4ம் தேதி காலை 11 மணியளவில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 4ம் தேதி அன்று தங்களது ஆதார் அட்டையுடன் வந்து வாகனத்திற்கு முன்பணமாக ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகபட்ச ஏலத்தொகை கோருபவர்கள், ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழுத்தொகையும் செலுத்தி வாகனத்தை பெற்று செல்லலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், எண் 2, ஜீவா கமர்ஷியல் காம்ப்ளக்ஸ், முதல் தளம், ஜி.எஸ்.டி.ரோடு, தாம்பரம் என்ற முகவரியிலும் 044 – 2226 2023 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 4ம் தேதி பழைய வாகனங்கள் பொதுஏலம் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Kanchipuram ,Kalachelvi Mohan ,District Ex-Servicemen Welfare Office ,
× RELATED வாக்காளர் சிறப்பு முகாமை காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு